இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நாட்டுவெடிகள் வெடித்து சிதறியதில் வாகனத்தில் சென்றவர் உடல் சிதறி பலி.!

0 2208

கரூர் அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நாட்டுவெடிகள் வெடித்து சிதறியதில், அந்த வாகனத்தில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த குமார் என்பவர் நாட்டு வெடிகளை ஒரு பையில் போட்டு அதனை தனது டி.வி.எஸ். 50 வாகனத்தில் சைலன்சர் அருகே தொங்கவிட்டப்படி கரூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

குளக்காரன்பட்டி அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென அந்த நாட்டுவெடிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இந்த வெடி விபத்தில் குமார் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலவிடுதி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நாட்டுவெடிகள் சைலென்சர் அருகே தொடங்கவிடப்பட்ட நிலையில், அந்த வெப்பத்தின் காரணமாக வெடித்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் என்ன மாதிரியான நாட்டுவெடி கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments