மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு உருமாறிய ஒமைக்ரான் தொற்று உறுதி ; இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 68 ஆக உயர்வு

0 2261
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 68 ஆக உயர்வு

மகாராஷ்டிராவில் 4 பேர் உள்பட மேலும் 7 பேருக்கு உருமாறிய ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டதால், நாட்டில் அந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை மகாராஷ்டிராவில் மட்டும் 32 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால், மருத்துவமனைகளில் தேவையான அளவுக்கு ஆக்சிஜன் விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

அனைத்து ஆக்சிஜன் மையங்களும் செயல்பாட்டு நிலையில் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே கொல்கத்தாவில் 7 வயது சிறுவனுக்கும், ஐதராபத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த இருவரும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments