தனியார் விடுதியில் 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு திடீர் மயக்கம்.. 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூர் மாவட்டம் ஜமீன் கொரட்டூர் அருகே தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் அந்த விடுதியில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக விடுதியில் பெண்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டதாகவும், இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த அதிகாரிகள் விடுதியில் பெண்களுக்கு தரமற்ற உணவு கொடுக்கப்பட்டதா, அல்லது தண்ணீரால் உபாதைகள் ஏற்பட்டதா என சோதனை செய்ய மாதிரிகளை சேகரித்துச் சென்றனர். போலீஸ் விசாரணையில் முறையான அனுமதி பெறாமல் விடுதி செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
Comments