சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியிலிருந்து ஏற்பட்ட மின்கசிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

0 1609
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியிலிருந்து ஏற்பட்ட மின்கசிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சட்டவிரோத மின்வேலியில் ஏற்பட்ட மின்கசிவு, வரப்பிலிருந்த தண்ணீரில் பாய்ந்ததை அறியாமல் அவ்வழியே சென்ற தம்பதியரில், கணவன் உயிரிழந்ததோடு, மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அரசம்பட்டியில் காட்டுப்பன்றியிடமிருந்து 3 ஏக்கர் நெல்வயலை பாதுகாப்பதற்காக மின்சார வாரியத்திற்கு தெரியாமல், சட்டவிரோதமாக பம்புசெட் இணைப்பிலிருந்து கதிர்வேலன் என்பவர் மின்வேலி அமைத்திருந்தார். இதை ஒட்டியிருந்த வயல்வெளியில் தேங்கிய தண்ணீரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

இதை அறியாமல், அப்பகுதிக்குச் சென்ற கிருஷ்ணன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரை காப்பாற்ற சென்று மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்ட அவரது மனைவி அங்கம்மாள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments