பழுது நீக்கிய படகை சோதனை செய்ய கடலில் இறக்கியபோது கவிழ்ந்து விபத்து ; ஒருவர் உயிரிழப்பு

0 1932
பழுது நீக்கிய படகை சோதனை செய்ய கடலில் இறக்கியபோது கவிழ்ந்து விபத்து

நாகப்பட்டினத்தில் பழுதுநீக்கம் செய்யப்பட்ட படகை சோதனை செய்ய கடலில் இறக்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார். தோணித்துறை சாலை அருகேயுள்ள கட்டுமான தளத்திற்கு சென்னையிலிருந்து வந்த படகை பழுது நீக்கி, சோதனை செய்வதற்காக கடுவையாற்றின் கடல் முகத்துவாரத்தில் இறக்கியபோது இவ்விபத்து நேர்ந்துள்ளது.

படகை இறக்கும் பணியில் ஈடுபட்ட 16 பேரில், படகு கவிழ்ந்த பக்கமாக நின்றிருந்த மூவரில் தாமஸ் என்பவர் மூச்சுதிணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லேசான காயங்களுடன் தப்பித்த திருசெல்வம், ஹரிஆதிநாராயணன் ஆகியோர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments