முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.2.16 கோடி பணம் பறிமுதல்..!

0 2683

முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் நடைபெறும் சோதனையில், கணக்கில் வராத பணம் 2 கோடியே 16 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் அறிவித்துள்ளனர்.

வருமானத்திற்கு அதிகமாக 4 கோடியே 85 லட்சத்திற்கு தன் பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் தங்கமணி சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி சாந்தி, மகன் தணிதரன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு துறையினர், தங்கமணிக்கு சொந்தமான மற்றும் அவர் தொடர்புடைய 69 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனையில் 2 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம், ஒரு கிலோ 130 கிராம் தங்கம், 40 கிலோ வெள்ளி, மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத பணம் 2 கோடியே 16 லட்சம் ரூபாய், கைபேசிகள், வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments