அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து ; 5 பெண்கள் உட்பட 9 பேர் பலி

0 3414
அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். அஸ்வராவ்பேட்டாவில் இருந்து ஜங்காரெட்டிகுடெம் நோக்கி சுமார் 47 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுனர் பேருந்தை திருப்பியதாக கூறப்படுகிறது.

அதனால் நிலைத்தடுமாறிய பேருந்து, ஜல்லேறு கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் 5 பெண்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் 38 பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

இதனிடையே, விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments