வீரமரணம் அடைந்த CRPF வீரரின் தங்கையின் திருமணத்தில் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து திருமண சடங்குகளை செய்த சக வீரர்கள்

0 3461
வீரமரணம் அடைந்த CRPF வீரரின் தங்கையின் திருமணத்தில் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து திருமண சடங்குகளை செய்த சக வீரர்கள்

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த CRPF வீரரின் தங்கையின் திருமணத்தில், மணமகளின் சகோதரன் செய்ய வேண்டிய சடங்குகளை சக வீரர்கள் செய்து நட்புக்கு மரியாதை செலுத்தினர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காஷ்மீரின் புல்வாமா-வில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஷைலேந்திர பிரதாப்  உள்பட CRPF வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற ஷைலேந்திர பிரதாப்பின் தங்கை ஜோதியின் திருமணத்திற்கு வந்த சக வீரர்கள் மணப்பெண்ணை மணமேடைக்கு அழைத்து வருவது முதல் அனைத்து திருமண சடங்குகளையும் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து செய்தனர்.

மணமக்களுக்கும் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். தங்கள் குடும்பத்தின் அனைத்து சுக துக்கங்களிலும் மகனுடன் பணியாற்றிய சக வீரர்கள் துணை நிற்பதாக ஷைலேந்திர பிரதாப்பின் தந்தை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments