இரு சக்கர வாகனம் மீது மோதுவதை தவிர்த்த போது நிலைத்தடுமாறி டிரான்ஸ்ஃபார்மர் கம்பம் மீது மோதி வாகனம் விபத்து

0 1864
இரு சக்கர வாகனம் மீது மோதுவதை தவிர்த்த போது நிலைத்தடுமாறி டிரான்ஸ்ஃபார்மர் கம்பம் மீது மோதி வாகனம் விபத்து

ராமநாதபுரத்தில் மீன் ஏற்றி வர சென்ற பிக் அப் வண்டி, எதிரே அதிவேகத்தில் வந்த இரு சக்கர வாகனம் மீது மோதுவதை தவிர்த்த போது, நிலைத்தடுமாறி சாலையோரத்தில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் கம்பம் மீது மோதியது.

ராமேஸ்வரம் அருகே வேற்கோடு பகுதியில், மீன் வியாபாரி சண்முகம் என்பருக்கு சொந்தமான வண்டியில் ஓட்டுனர் மற்றும் கிளீனர் சென்றுக்கொண்டுருந்தனர். அப்போது சாலையின் எதிரே அதிவேகமாக இரு சக்கர வாகனம் ஒன்று மீன் வண்டியை நோக்கி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விபத்து ஏற்படுவதை தவிர்க்க மீன் வண்டியை ஓட்டுனர் திருப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சாலை ஓரத்தில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் கம்பம் மீது அது மோதியதில் ஓட்டுனரும் கிளீனரும் படுகாயமடைந்தனர். இதனிடையே, விபத்து நடந்தபோது அப்பகுதியில் மின் வெட்டு இருந்த காரணத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments