இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிய, ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் தேவை - அமைச்சர் அன்பில் மகேஷ்

0 5171

இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிய, ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் தேவை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், ஆசிரியர்கள் பணியிட கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்த அவர், பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது, என்றும் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments