ஹெலிகாப்டர் விபத்து - விமானி வருண்சிங் காலமானார்

0 4601

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலத்த தீக்காயமடைந்த விமானி வருண் சிங், பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

டிசம்பர் எட்டாம் நாள் கோவை சூலூரில் இருந்து குன்னூருக்குச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். உடலில் 80 விழுக்காடு தீக்காயங்களுடன் உயிர் பிழைத்த விமானி வருண் சிங்குக்கு முதலில் குன்னூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பின் பெங்களூரில் உள்ள விமானப்படை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்ததாகத் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. வருண் சிங் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments