அதிமுக கூட்டணியில் பாமக உள்ளதா.? - இ.பி.எஸ் பதில்

0 3247

முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருவதற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைக் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் பா.ம.க. நீடிக்கிறதா என்ற கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

பாமக கூட்டணியில் இருந்து விலகி விட்டனர். துரோகம் செய்துவிட்டதாகக் கூறுகிறார்கள். என்ன துரோகம் என விளக்கிக் கூற வேண்டும். அவர்கள் கூட்டணியில் இருந்து விலகி விட்டனர் ஆனால் அவர்கள் நாங்கள் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி வருகிறார்கள் என்ன துரோகம் செய்தனர் என அவர்கள் கூற வேண்டும்.

மக்கள் வாக்களிக்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும். பாமகவினர் திமுகவிற்கு ஆதரவாக பேசி வருகிறார்களே என்று கேட்டதற்கு, அது அவர்களது வாடிக்கை. இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments