கம்போடியா நாட்டில் முதல் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது

0 1722

கம்போடியாவில் முதல்முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கானா நாட்டிற்கு சென்று திரும்பிய 23 வயதான பெண்மனிக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அந்த பெண்மனி 15 வார கர்ப்பிணி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவிலேயே அதிகபட்சமாக அந்நாட்டில் நாட்டில் மொத்தமுள்ள சுமார் 1 கோடியே 60 லட்சம் மக்கள் தொகையில் அதிகபட்சமாக 88 சதவீதம் பேருக்கு தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டதையடுத்து கடந்த மாதம் முதல் சுற்றுலா பயணிகள் வருகைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது முதல் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments