மும்பையில் 21 மாதங்களுக்குப் பின் 7ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு

மும்பையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 21 மாதங்களுக்குப் பின் மீண்டும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா அச்சத்தால் கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு எட்டாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஏற்கெனவே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தன. ஒமிக்ரான் தொற்று அச்சம் உள்ளபோதும் மும்பையில் கொரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளது.
இதையடுத்து ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மீண்டும் பள்ளிக்குச் செல்வதால் பிள்ளைகள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், இணையவழிக் கற்றலை விடப் பள்ளியில் நேரடியாகக் கற்பது சிறந்தது என்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
Comments