ஒமிக்ரான் அச்சுறுத்தல் எதிரொலி - ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் அவசர கடிதம்

0 2434

நைஜீரியாவில் இருந்து சென்னை திரும்பியவருக்கு ஒமிக்ரான் முதற்கட்ட பரிசோதனையில் S வகை மரபணு மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று தடுப்பு குறித்து எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த பயணியின் ரத்த மாதிரி சந்தேகத்திற்குரிய மாதிரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதோடு மரபணு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடிதம் எழுதியுள்ள ராதாகிருஷ்ணன், தடுப்பூசி செலுத்தத் தவறிய மற்றும் குறித்த காலத்திற்குள்ளாக 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செயல்பாடுகளை தீவிரப்படுத்த வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments