ஷனேல் நிறுவனத்தின் உலகளாவிய சீ.ஈ.ஓ.,வாக இந்தியாவின் லீனா நாயர் நியமனம்

0 2583

பிரான்ஸின் ஃபேஷன் ஆடை மற்றும் ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் ஷனேல் (Chanel) நிறுவனத்தின் உலகளாவிய சி.ஈ.ஓ வாக இந்தியாவின் லீனா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் பெப்ஸிகோ நிறுவனத்தை வழி நடத்தும் உலகளாவிய சி.ஈ.ஓ இந்திரா நூயீ-க்கு பிறகு மிக பெரிய நிறுவனத்தின் உலகளாவிய சி.ஈ.ஓ வாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய பெண்மணி என்ற பெயரை லீனா நாயர் பெற்றுள்ளார்.

சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பைக் கொண்ட ஷனேல் நிறுவனம் லூயீ வியூடான் (louis vuitton), ஹமீஸ்(hermes), கூச்சி (Gucci), லோரியால் (Loreal) உள்ளிட்ட நிறுவனங்களின் போட்டி நிறுவனமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரியாக இருந்த லீனா நாயர் தற்போது ஷனேல் நிறுவனத்தை வழிநடத்த உள்ளார். மாஹாராஷ்டிராவின் கோலாபூரில் பிறந்த லீனா நாயர், ஜம்ஷெத்பூர் XLRI கல்லூரியில் மனிதவள படிப்புக்காக தங்க பதக்கம் பெற்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments