முறைகேட்டில் சஸ்பெண்ட் ஆன கூட்டுறவு வங்கிச் செயலாளர் தற்கொலை

0 14331

நகைக்கடன் முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கீரனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிலவள வங்கியின் செயலாளர் நீலகண்டன் தற்கொலை செய்து கொண்டார்.

ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் நகைக்கடன் முறைகேடாக வழங்கியதாக எழுந்த புகாரில், நீலகண்டன் உள்ளிட்ட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் கீரனூரில் உள்ள அவரது வீட்டின் கழிவறையில், மனஅழுத்தம் காரணமாக நீலகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

காவல்துறையினர் அவரது சடலத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments