நாமக்கல்லில் காட்டுப்பகுதியில் கொலை செய்வதற்கு திட்டம் போட்டுக் பேசிக் கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்து பிடித்த போலீசார்.!

0 2226

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பில்லூர் காட்டுப்பகுதியில் கொலை செய்வதற்கு திட்டம் போட்டுக் பேசிக் கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்த போலீசார், அங்கிருந்த 5 பேரை மடக்கி பிடித்தனர்.

பரமத்திவேலூரிலிருந்து பில்லூர் செல்லும் சாலையில், காட்டுப்பகுதியில் ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனகள் நிற்பதை கவனித்த போலீசார், மறைந்திருந்து பேச்சு சத்தத்தை கேட்ட போது, கொலை செய்வதற்கு திட்டம் போட்டுக் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, 7 பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்த போலீசார், அங்கிருந்த 5 பேரை மடக்கி பிடித்த நிலையில், இருவர் தப்பினர்.

விசாரணையில், கொலை செய்வதற்கு திட்டம் போட்டுக் பேசிக் கொண்டிருந்ததாகவும், செலவிற்காக கொள்ளையடிக்க வந்ததாகவும் ஒப்புக்கொண்டனர். மேலும், தப்பி ஓடிய 2 முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments