11 ஆப்பிரிக்க நாடுகளை சிவப்புப் பட்டியலில் இருந்து நீக்கியது இங்கிலாந்து

0 1966

ஒமிக்ரான் தொற்று காரணமாக பயணத்திற்காக தடை விதிக்கப்பட்ட 11 நாடுகள் மீதான தடையை இங்கிலாந்து நீக்கியுள்ளது.

ஒமிக்ரான் தொற்று பரவியதால் அங்கோலா, போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டு, மேற்கண்ட நாடுகள் சிவப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து சுகாதாரத்துறைச் செயலாளர் சாஜித் ஜாவித், ஒமிக்ரான் சமூகப் பரவலாக இல்லாததால் 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வருவதாற்கான தடை நீக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். ஆனால் அப்படி வந்தாலும் அவர்கள் தங்களை சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments