பெற்றோரின் அலட்சியத்தால் பூட்டிய வீட்டில் சிக்கிய இரண்டரை மாத குழந்தை பத்திரமாக மீட்பு

0 3955

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெற்றோரின் அலட்சியத்தால், வீட்டின் கதவு தானாக மூடியதன் காரணமாக, வீட்டில் சிக்கிய இரண்டரை மாத குழந்தையை, தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

அழகியமண்டபம் பகுதியில் நிதின்-சிந்து தம்பதியினர், தங்களது இரண்டரை மாத கைக்குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். கணவனை வழியனுப்புவதற்கு, தூங்கி கொண்டிருந்த குழந்தையை வீட்டின் நடு தளத்தில் வைத்து வெளியே சென்ற நிலையில், எதிர்பாராத விதமாக வீசிய காற்றினால், முன்பக்க கதவு தானாகவே மூடி லாக் ஆனது.

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து, குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments