கொரோனாவின் உருமாறிய ஒமிக்ரான் தற்போது 77 நாடுகளுக்கு பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு.!

0 2015

கொரோனாவின் உருமாறிய ஒமிக்ரான் தற்போது 77 நாடுகளுக்கு பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அது மிகவும் மிதமான பாதிப்பையே ஏற்படுத்தி வருகிறது என்பதால் அதனை அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும் உலக நாடுகளை அது எச்சரித்துள்ளது.

இதுவரை எந்தவொரு வைரசும் பரவாத வேகத்துடன்  ஒமிக்ரான் அதிவேகமாகப் பரவி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் கேப்ரியெசஸ் தெரிவித்துள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு ஆதரிப்பதில்லை என்ற போதும் ஒமிக்ரான் விஷயத்தில் உடல்  நலிந்தவர்கள், முதியோர்களின் உயிரை பாதுகாக்க பூஸ்டர் தடுப்பூசி சிறந்த பாதுகாப்பு அரணாக இருக்கக் கூடும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments