ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தானின் இரட்டை வேடத்தால் அமெரிக்கா அதிருப்தி

0 1637

தாலிபன் படைகள் அமெரிக்க வீரர்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்திய போதும் கூட பாகிஸ்தான் தாலிபன் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான அடைக்கலம் தந்தது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

எதிர்காலத்தில் பாகிஸ்தானுடன் கடுமையான பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே அந்நாட்டுடன் உறவுப்பாதையை தொடர முடியும் என்று வெளியுறவு செனட் குழுவின் தலைவரான ராபர்ட் மெனன்டெஸ் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் இலக்கு தோல்வியைத் தழுவியதற்கு ஒரு காரணம் பாகிஸ்தானின் இரட்டை நிலைப்பாடு தான் என்று அவர் விமர்சித்துள்ளார்.

இத்தகைய சவாலான நேரத்தில் பாகிஸ்தானுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கு புதிய தூதராக டோனால்ட் ஆர்மின் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments