கடலூரில் மனநலம் பாதிக்கப்பட்டவரை சரமாரியாக தாக்கிய தனியார் பேருந்து நடத்துனர் கைது.!

0 5027

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை சரமாரியாக தாக்கிய தனியார் பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டார்.

விருத்தாசலத்தில் தனியார் பேருந்து ஒன்றில் மனநலம் பாதிக்கப்பட்டவர் பயணிப்பதற்காக ஏறிய போது நடத்துனர் அவரிடம் பயணச்சீட்டு எடுக்கக் கூறியதாகவும் இதனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்நடத்துனரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த நடத்துனர் மற்றும் ஓட்டுனர் இருவரும் அந்த நபரை சரமாரியாக தாக்கியும், தரதரவென பேருந்து நிலையம் முழுவதும் இழுத்து செல்லும் வீடியோ வேகமாக பரவியது.

இதனை அடுத்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்துனர் வீரமணியை கைது செய்தனர். ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments