ஒமிக்ரான் தொற்று நிலைமையைப் பொறுத்தே சர்வதேச விமான சேவை குறித்து முடிவு செய்யப்படும் - அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா

0 1612

ஒமிக்ரான் தொற்று நிலைமையைப் பொறுத்துதான், சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்க முடியும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், சுகாதார அமைச்சகத்துடன் நெருங்கிப் பணியாற்றி வருவதாகவும், ஒமிக்ரான் வைரஸ் தொற்று நிலைமையைப் பொறுத்துதான், சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்க முடியும் என்றும் கூறினார்.

  பிற அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அடுத்த 2 வாரங்களில் நிலவும் சூழ்நிலையைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments