சுயதொழில் பயிற்சி அளிப்பதாகக் கூறி ரூ.5 கோடி ஏமாற்றிய யூடியூப் சேனல் நிர்வாகியின் வீடு முற்றுகை

0 13481
சுயதொழில் பயிற்சி அளிப்பதாகக் கூறி ரூ.5 கோடி ஏமாற்றிய யூடியூப் சேனல் நிர்வாகியின் வீடு முற்றுகை

பெண்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என யூடியூபில் விளம்பரம் செய்து 5 கோடி ரூபாய் அளவில் ஏமாற்றியதாகக் கூறப்படும் கோவை சூலூரைச் சேர்ந்த பெண்ணின் வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.

பாரதிபுரத்தைச் சேர்ந்த கோதை நாச்சியார் என்ற அந்தப் பெண், தனது பெயரிலேயே யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். சுமார் 70 ஆயிரம் பேர் இவரது யூடியூப் சேனலை பின் தொடருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் வீட்டிலிருந்தபடியே லட்சங்களில் சம்பாதிப்பதற்கான பயிற்சிகளை வழங்குவதாகக் கூறி அதற்குக் கட்டணம் என்ற பெயரிலும் பயிற்சிக்குப் பிறகு சுயதொழில் முதலீட்டுக்காக வங்கிகளில் கடன் பெற்றுத் தருவதற்காகக் கூறி அதற்கு கமிஷன் என்ற பெயரிலும் கோதை நாச்சியார் பணம் வசூலித்து ஏமாற்றிவிட்டார் என்று கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கோதை நாச்சியாரின் வீட்டை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். தகவலறிந்து வந்த போலீசார், கோதை நாச்சியார் மீது பல்வேறு மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி அவர்களை திருப்பி அனுப்பினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments