ஓசூர் அருகே முந்திச் செல்ல வழிவிடவில்லை எனக் கூறி லாரி ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் கைது

0 17417
லாரி ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே முந்திச் செல்ல வழிவிடவில்லை எனக் கூறி மெதுவாக சென்ற கண்டெய்னர் லாரியை மடக்கி, கல்வீசி கண்ணாடியை உடைத்து தாக்குதலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்தின் ஓட்டுனர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அழகுபாவி என்னுமிடத்தில் மிதமான வேகத்தில் சென்ற சரக்கு லாரியை பின்னால் வந்த சுராஜ் என்ற ஆம்னி பேருந்து வேகமாக முந்திச்சென்று மறித்தது.

பேருந்தில் இருந்து இறங்கிய ஓட்டுனர்கள் இருவர், நெடுஞ்சாலையில் வேகமாக செல்லாமலும், பின்னால் வந்த தனது பேருந்துக்கு வழி விடாமலும் செல்வதாகக் கூறி லாரி ஓட்டுனரை தாக்கிய வீடியோ வெளியானது.

இரண்டு நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments