ஆன்மீக பயணமாக கோவில்களுக்கு சென்று கைவரிசை காட்டிய முதியவர்.. 80 கிலோ வெள்ளிப் பொருட்கள், 225 கிராம் தங்க பொருட்கள் பறிமுதல்

0 2099
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஆன்மீக பயணமாக கோயில்களுக்கு சென்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை திருடிய முதியவரை ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஆன்மீக பயணமாக கோயில்களுக்கு சென்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை திருடிய முதியவரை ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திராவில் உள்ள குஷமா ஹரந்தா கோவிலில் கடந்த நவம்பர் 26-ந் தேதி சில பொருட்கள் திருடு போனதாக கோவில் நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது.

கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் திருட்டில் ஈடுபட்ட, செகந்தரபாத்தை சேர்ந்த அங்கோத் ராமுலு நாயக் என்ற முதியவரை கைது செய்தனர்.

மேலும் அவரது வீட்டில் சோதனையிட்டதில் கோயில்களில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் ஏராளமான வெள்ளிப் பொருட்கள் மற்றும் தங்கப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments