செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் ரூ.20 லட்சம் கொள்ளை ; திருடனுக்கு போலீசார் வலைவீச்சு

0 1703
செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் ரூ.20 லட்சம் கொள்ளை

கோவையில் செல்போன் உதிரிபாக விற்பனை நிலையத்திற்குள் புகுந்த திருடன், கல்லாவில் வைக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

காந்திபுரம் பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த பிரதாப் ராஜு என்பவருக்கு சொந்தமான கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன் கல்லா பெட்டியை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றான்.

சம்பவத்தின் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில், கோவை காட்டூர் காவல்நிலைய போலீசார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையனை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments