பெற்றோருக்கு பயந்து கருவுற்றதை மறைக்க மாடியிலிருந்து குதித்து இளம்பெண்.. சம்பவ இடத்திலேயே பிறந்த ஆண் குழந்தை..
சென்னையில் காதலனுடான எல்லை மீறிய பழக்கத்தால் கருவுற்றிருந்த இளம்பெண், பெற்றோருக்கு பயந்து மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், வயிற்றில் இருந்த ஆண் சிசு உயிரிழந்தது.
கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண், தொழிற்பேட்டையிலுள்ள ஐ.டி.ஐ.யில் பயின்று வந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
விழுந்து கிடந்த பெண்ணின் அருகே ரத்த வெள்ளத்தில் தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் ஆண் சிசுவும் கிடந்துள்ளது. விசாரணையில், காதலனுடனான எல்லை மீறிய பழக்கத்தால் கர்ப்பம் தரித்த அவரை விஷயம் தெரிந்து காதலன் கைவிடவே, இதுநாள் வரை கருவுற்றது பெற்றோருக்கு தெரியாமல் மறைத்து வந்திருக்கிறார்.
8 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீரென வலி ஏற்பட்டதால் பெற்றோருக்கு பயந்து மாடியில் இருந்து குதித்த நிலையில், குழந்தை இறந்தது தெரியவந்துள்ளது. இளம்பெண்ணின் காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments