மனநலம் பாதிக்கப்பட்டவரை சரமாரியாகத் தாக்கி, தரதரவென இழுத்துச் சென்ற தனியார் பேருந்து நடத்துநர், ஓட்டுநர்..

0 2224
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை, தனியார் பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் சரமாரியாகத் தாக்கி, தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை, தனியார் பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் சரமாரியாகத் தாக்கி, தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

40 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதித்த அந்த நபர் பல நாட்களாக பேருந்து நிலைய பகுதியில் சுற்றித் திரிந்து வருவதாக சொல்லப்படுகிறது. இரு தினங்களுக்கு முன் தனியார் பேருந்து ஒன்றில் ஏறிய அந்த நபர், நடத்துநர் வைத்திருந்த பணப் பையை பிடித்து இழுத்தார் எனக் கூறப்படுகின்றது.

இதனால் ஆத்திரமடைந்த நடத்துநரும் ஓட்டுநரும் மனநலம் பாதித்த நபரை சரமாரியாகத் தாக்கி, தரதரவென இழுத்துச் சென்றதாக கூறி, வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

சமூக வலைதளத்தில் வீடியோ வைரலான நிலையில், சம்மந்தப்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments