தனியார் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்கள் ; ஆட்சியரின் உத்தரவின் பேரில் தனியார் பேருந்து பறிமுதல்

0 4945
தனியார் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்ததால், ஆட்சியரின் உத்தரவின் பேரில் அந்த தனியார் பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த ஆர்.எஸ்.மணி என்ற அந்த தனியார் பேருந்தில், பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கெட்டில் தொங்கிய படி பயணித்தனர்.

அவ்வழியாக சென்ற நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், அதை புகைப்படம் எடுத்து வட்டார போக்குவரத்து ஆய்வாளருக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதன் படி, புத்தூர் அருகே அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வந்த தனியார் பேருந்தை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மடக்கிப் பிடித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments