கல்லூரி மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேர் கைது

0 2355
கல்லூரி மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கல்லூரி மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

19 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கு பண உதவி செய்வது போல் பழகி அவரை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து பலாத்காரம் செய்ததாக, ராணுவ வீரர்கள் சஜித், கிரீஷ் மற்றும் இவர்களுடைய நண்பர்கள் ஜாண் பிரிட்டோ, லிபின் ஜான் ஆகிய 4 பேர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் விசாரணை நடத்த 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஜான் பிரிட்டோ, லிபின் ஜாண் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கியுள்ள ராணுவ வீரர்களான சஜித் மற்றும் கிரீஸ் ஆகிய இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தனிப்படை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments