48 மணி நேரத்தில் லண்டனில் ஒமிக்ரான் தொற்று பலமடங்காகும்.. பிரிட்டன் சுகாதார அமைச்சர்

0 2511
லண்டனில் பரவும் கொரோனாவில் 44 சதவிகிதம் ஒமிக்ரான் வைரஸ் மூலம் பரவுவதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் அங்கு டெல்டாவை ஓவர்டேக் செய்து ஒமிக்ரான் ஆதிக்கம் செலுத்தலாம் எனவும் பிரிட்டன் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரானால் ஏற்படும் தொற்றால் நாளொன்றுக்கு 2 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என கருதப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரிட்டனில் ஒமிக்ரான் தொற்று பாதித்து ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 10 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அவர்களில் பெரும்பாலானோர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் போட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் விசுவரூபம் எடுக்கும் என வெளியாகும் செய்திகளால், தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிவதாகவும் பலர் போட்டி போட்டுக்கொண்டு தடுப்பூசி முன்பதிவை நடத்துவதாகவும் பிரிட்டனின் மருத்துவ சேவைகள் துறை டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments