25ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி குத்தாட்டம் போட்டு உற்சாகமாக கொண்டாடிய பெண் காவலர்கள்..

0 10842
கோவையில், காவல்துறையில் சேர்ந்து 24 ஆண்டுகால பணியை நிறைவு செய்த பெண் காவலர்கள் பலர் ஒன்றிணைந்து 25ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை உற்சாகமாக கொண்டாடினர்.

கோவையில், காவல்துறையில் சேர்ந்து 24 ஆண்டுகால பணியை நிறைவு செய்த பெண் காவலர்கள் பலர் ஒன்றிணைந்து 25ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை உற்சாகமாக கொண்டாடினர்.

கடந்த 1997ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள், 25ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் விதமாக ஆனைக்கட்டில் உள்ள சொகுசு விடுதியில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த நிகழ்ச்சியில் அனைத்து பெண் காவலர்களும் ஒரே மாதிரியான சேலை அணிந்து, கேக் வெட்டி கொண்டாடினர். பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு சினிமா பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினர்.

24 ஆண்டுகளாக காவலர் பொறுப்பிலிருந்த இந்த பெண் காவலர்கள் அனைவரும், விரைவில் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments