நாமக்கல்! சாலை விபத்தில் செயலிழந்த 2 கால்கள்.. பெற்றோரோ கூலி வேலை.. அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்.!

0 2576

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, சாலை விபத்தில் முதுகு தண்டுவடம் உடைந்ததால் கால்கள் செயல் இழந்த இளைஞர் ஒருவர், அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

தொட்டியபட்டி கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுனராக பணியாற்றியவர் சங்கர். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் இரண்டு கால்களும் செயலிழந்து நடக்க முடியாத நிலையில் உள்ளார்.

இதனால், வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி இருப்பதாக கூறும் சங்கர், பெற்றோர் கூலி வேலை செய்வதால் வறுமையில் தவித்து வருவதாக கண்ணீர் மல்க கவலை தெரிவிக்கிறார். இதன் காரணமாக தமிழக அரசு மருத்துவ உதவி மற்றும் சுய தொழில் செய்ய உதவ வேண்டும் என சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments