பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் பார்ட்டியில் கலந்துக் கொண்ட நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா உறுதி.!

0 4521

பிரபல பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் ஏற்பாடு செய்த பார்ட்டியில் கலந்துக் கொண்ட நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன்  தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு வருவதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரன் ஜோஹர் இயக்கிய கபி குஷி கபி கம் படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கடந்த 8 ஆம் தேதி அவரது வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார். 

பார்ட்டியில் கலந்துக்கொண்ட நடிகர் சல்மான் கானின் சகோதரர் மனைவி சீமா கானுக்கும் கடந்த 11 ஆம் தேதி கொரோனா தொற்றிய நிலையில், அவரை தொடர்ந்து கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகியோருக்கும் கொரோனா தொற்றிக்கொண்டது.

சீமா கான் வாழும் கட்டடத்தில் கொரோனா நோயாளி இருந்தும், கோவிட் தடுப்பு வழிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு பார்ட்டியில் கலந்துக்கொண்டதாக மும்பை மாநகராட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், பார்ட்டியில் கலந்துக் கொண்ட கரீனா கபூரின் சகோதரி நடிகை கரிஷ்மா கபூர் உள்ளிட்ட அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments