2019 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு புகாரை, சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..!

0 1242

2019 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு புகாரை, சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர்.

இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டதோடு, நேர்மையாகவும், விரைவாகவும் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சிபிஐ-க்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments