தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் 5 நாட்களுக்கு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரு நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 16,17,18ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 5 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
Comments