அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்

0 1756

அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விதிகளை பின்பற்றாமல் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதாகவும், ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எசும், இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எசும் தேர்வு செய்யப்பட்டதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்கக்  கூடாது எனவும் கூறி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், அதிமுகவின் உட்கட்சி தேர்தலில் தலையிட்டு கண்காணிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments