சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு!

0 2905

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு அவரது உறவினரின் Ford Fiesta காரில் மீண்டும் சென்னை திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது காரில் இருந்து புகை வந்ததை சுதாரித்த இசக்கிமுத்து, வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு வெளியேறிய நிலையில், புகை அதிகரித்து கார் முழுவதும் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்தது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சேதமான நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments