குஜராத்தில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து நாட்டின் மொத்த பாதிப்பு 41-ஆக அதிகரிப்பு..!

0 1705

குஜராத்தில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து நாட்டின் மொத்த பாதிப்பு 41-ஆக அதிகரித்துள்ளது.

அண்மையில் தென் ஆப்பரிக்காவில் இருந்து வந்த 42 வயதான நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருடன் பயணித்த 4 பேருக்கும் கொரோனா நெகடிவ் வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொற்று உறுதியானவரின் மாதிரிகள் மரபணு வரிசைமுறை சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குஜராத்தில் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments