தமிழகத்தில் 7 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி.!

0 10970

தமிழகத்தில் 7 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 38 கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில், 24 கல்லூரிகள் அரசு மருத்துவக் கல்லூரிகள் ஆகும். இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 9 கல்லூரிகளுக்கும், அதற்கடுத்து தமிழகத்தில் 7 புதிய கல்லூரிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் புதிதாக 4,845 எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நாடு முழுவதும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை 88,120ஆக உயர்ந்துள்ளது.

  நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க இலக்கு நிர்ணயித்து செயல்படுவதாக, மத்திய அரசு கூறிவருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments