தமிழகத்தில் வரும் 31ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு.!

0 2081

தமிழகத்தில் வரும் 31ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊடரங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்தும் அனுமதிக்கப்படும் என்றும், ஜனவரி 3ஆம் தேதி முதல், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில் நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments