சூடானில் ராணுவ ஆட்சி உடனடியாக நீக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி அமலாக வேண்டுமெனக் கோரி மக்கள் பேரணி.!

0 1600

சூடானில் ராணுவ ஆட்சி உடனடியாக நீக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி அமலாக வேண்டுமெனக் கோரி பேரணியாக சென்ற பத்தாயிரம் பேரை கண்ணீர் புகை மற்றும் தடியடி நடத்தி ராணுவத்தினர் கலைத்தனர்.

2023-ஆம் ஆண்டு முதல் அரசியலில் ராணுவம் துளியும் ஈடுபடாது என்றும் அதுவரை ஆட்சியை ராணுவம் தான் வழிநடத்துமென ராணுவத் தளபதி அல் புர்கான் தெரிவித்தார்.

இதை கண்டித்து தற்போதே தங்களுக்கு ஜனநாயக ஆட்சி வேண்டுமென என தலைநகர் கார்தோம், உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் பேரணியாக சென்றனர். அமைதியாக பேரணி செல்ல போடப்பட்ட உத்தரவை மீறியதாக தடியடி மற்றும் கண்ணீர் புகை வீசி  பொது மக்களை ராணுவத்தினர் கலைத்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments