டெல்லியில் மாலின் பாரில் நடனமாடக் கூறி உரிமையாளர் வற்புறுத்தியதால் நேபாளத்தை சேர்ந்த பெண் தற்கொலை.!

0 1793

டெல்லி ரோகினி பகுதியில் உள்ள மாலின் பாரில் நடனமாடக் கூறி உரிமையாளர் வற்புறுத்தியதால் நேபாளத்தை சேர்ந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

21 வயது பெண்ணை பாரில் நடனமாடும்படி அதன் உரிமையாளர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மாலின் 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக உணவக உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments