திருநெல்வேலியில் தாம் பெற்ற மூன்று மகன்களையும் ராணுவத்திற்கு அர்ப்பணித்த தாய்க்கு ராணுவம் சார்பில் வீரத்தாய் விருது.!

0 7124

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், தாம் பெற்ற மூன்று மகன்களையும் ராணுவத்திற்கு அர்ப்பணித்த தாய்க்கு ராணுவம் சார்பில் வீரத்தாய் விருது வழங்கப்பட்டது. அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன்- சுப்புலெட்சுமி தம்பதிக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில், தனது மூன்று மகன்களையும், ராணுவப் பணிக்கு அனுப்பிய சுப்புலட்சுமியை பாராட்டி ராணுவம் சார்பில், அவருக்கு வீரத்தாய் விருதும், வெள்ளிப்பதக்கத்தையும், திருநெல்வேலி மாவட்ட படைவீரர்கள் நல அலுவலக உதவி இயக்குநர் முருகன் வழங்கி கௌரவித்தார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments