அஸ்ஸாமில் கர்ப்பிணி யானையும், இளம் வயது ஆண் யானையும் உயிரிழப்பு.! விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல்

0 1899

அஸ்ஸாமில் இரு யானைகள் உயிரிழந்ததற்கு அவை விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காசிரங்கா தேசியப்பூங்காவை ஒட்டி அமைந்துள்ள போர்பேட்டாகான் என்ற இடத்தில் கர்ப்பிணி யானையும், இளம் வயது ஆண் யானையும் உயிரிழந்த நிலையில் கண்டுபிடித்தது.

இதையடுத்து வனத்துறை மருத்துவக் குழுவினர் நிகழ்விடம் சென்று உடற்கூறாய்வு செய்தனர். இந்நிலையில் யானைகள் இரண்டும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments