ஜம்மு காஷ்மீரில் போலீஸ் பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு.. 2 போலீசார் வீர மரணம்

0 1736

ஜம்மு காஷ்மீரில் போலீஸ் பேருந்தை குறி வைத்து நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில்  போலீசார் 2 பேர் வீர மரணம் அடைந்தனர்.

ஸ்ரீநகரின் புறநகர் பகுதியினா பந்தா சவுக்-கில், போலீஸ் முகாம் அருகே நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் பேருந்து மீது  பயங்கரவாதிகள் இருவர் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர்.

பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள பகுதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் போலீசார் இருவர் உயிரிழந்தனர். காயமடைந்த  போலீசார் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments