டேவிட் வார்னருக்கு ஐசிசியின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது

0 4515

ஐசிசியின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து ஐசிசி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா முதல் முறையாக பட்டம் வென்று வரலாறு படைப்பதற்கு உதவியதன் மூலம் வார்னருக்கு விருது கிடைத்துள்ளது.

இதேபோல் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது மேற்கிந்திய தீவுகள் அணி வீராங்கனை ஹேய்லீ மேத்தீவ்ஸ்(Hayley Matthews)க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் ஆல் ரவுண்டராக சிறப்பான பங்கை அளித்து தொடர் வெற்றிக்கு காரணமாக அமைந்ததால் அவருக்கு விருது கிடைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments