மகாகவி பாரதி பிறந்த சொந்த ஊருக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

0 1496

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாரின் இல்லம் மற்றும் நினைவு மண்டபத்திற்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும், அவரது மனைவியும் பாரதியாரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்த ஆளுநர், பாரதியார் பிறந்த சொந்த ஊரான எட்டயபுரத்திற்கு வருகை தந்தார்.

மணிமண்டபம் வந்த அவருக்கு பாரதி வேடமணிந்த குழந்தைகள் பாரதி பாடல்களை பாடி வரவேற்பு அளித்தனர். பின்னர், பாரதியார் வாழ்ந்த இல்லத்திற்கு சென்ற அவர், அங்குள்ள வருகை பதிவேட்டில் பாரதியை பற்றி சிறுகுறிப்பை எழுதி, கையெழுத்திட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments